டேஸ்டி ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிபி

Tasty Sweet Corn Pakkoda Recipe

by Isaivaani, May 3, 2019, 00:24 AM IST

வீட்டிலேயே சுவையான ஸ்வீட் கார்ன் பக்கோடா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் 2 கப்

கடலை மாவு ஒரு கப்

அரிசி மாவு, மக்காச்சோளம் மாவு - தலா கால் கப்

வெங்காயம் ஒன்று

பச்சைமிளகாய் 2

சில்லி ப்ளேக்ஸ் 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை கால் கப்

உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரில் ஸ்வீட் கான் முத்துக்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டவும்.

ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை கடலை மாவு அரிசி மாவு மற்றும் மக்காச்சோளம் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பிசைந்து வைத்திருக்கும் ஸ்வீட் கான் கலவையை எண்ணெயில் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிபி ரெடி..!

You'r reading டேஸ்டி ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை