ஏர்செல் நம்பரை காப்பாற்ற சில எளிய வழிகள்... முயற்சிக்கலாம் வாங்க

முன்கதை என்ற பெயரில் மொக்கை போடாமல் நேரே விஷயத்துக்கு வருவோம். ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் மொபைல்கள் மூலம் தொடர்பு கொண்டு UPC code பெற்றுக்கொள்ள வசதியாக 9841012345 என்ற எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளது. அதை தொடர்பு கொண்டு கணினி குரல் வழிகாட்டி உதவியுடன் எளிதில் UPC code பெறலாம். அதற்கு தேவை உங்கள் ஏர்செல் எண், மற்றும் உங்கள் சிம்முக்கு பின்னால் உள்ள 20 எண்களில் கடைசி 5 எண்களும், கடைக்கு கொண்டு செல்ல ஆதார் கார்டு நம்பரும் தேவை.

நம்மில் பலருக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், சிம் இருக்கும் ஆனால் சிம்முக்கு பின்னால் உள்ள எண்கள் அழிந்திருக்கும், அல்லது மைக்ரோ சிம்மாக கட் செய்யும்போது தவறியிருக்கும், அப்படியென்றாலும் கவலை பட வேண்டாம், கடைசி 5 இலக்க எண்களையும் உங்கள் மொபைலிலேயே கண்டுபிடித்து விடலாம். அதற்கு நமக்கு தேவை, உங்கள் கட் செய்த அல்லது பழைய ஏர்செல் சிம்மை பொருத்துவதற்கு, பிளே ஸ்டோர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய ஒரு மொபைல் இருந்தால் போதும்.

அந்த மொபைல் டூயல் சிம்மாக இருந்தால் சிம் 1-ல் உங்கள் ஏர்செல் சிம்மை பொருத்துங்கள், சிம் 1-ல் மட்டுமே பொருத்த வேண்டும். அடுத்து, வை-ஃபை மூலமோ, அல்லது சிம் 2 இணையம் மூலமோ கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று "சிம் கார்ட்" என சர்ச் செய்து அதற்கான அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அந்த ஆப்ஸுக்குள் சென்று உங்கள் சிம் ஐடி நம்பரை எடுத்துக் கொள்ளலாம், அந்த ஐடி நம்பரில் உள்ள கடைசி 5 இலக்க எண்களை மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்கள் தான் உங்கள் சிம்முக்கு பின்னாலும் இருக்கும்.

இனி 9841012345 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடுத்தடுத்த கேள்விகளுக்கு 1+1+1+1 என அழுத்தவும், உங்கள் மொபைல் எண் கேட்கும், அதையும் தொடர்ந்து அழுத்தவும், பின்னர் சிம்மிக்கு பின்னால் உள்ள 5 எண்களை கேட்கும், தொடர்ந்து அழுத்தவும், பேப்பர்-பேனாவை கையில் வைத்துக் கொண்டு கவனமாக கவனிக்க வேண்டும், உங்களது UPC code-ஐ அந்த கணினி குரல் தெரிவிக்கும், அதை எழுதி வைத்துக்கொண்டு அடுத்த 15 நாட்களுக்குள் நீங்கள் எந்த நெட்வொர்க் ஸ்டோருக்கும் சென்று, உங்கள் ஏர்செல் எண்ணை காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனாலும் இந்த வழிமுறை சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இணைப்பு பாதியிலேயே துண்டுக்கப்படலாம்.

கூகுலின் மூலமாக aircel generation upc page என சர்ச் செய்து, அதில் வரும் வெப்சைட்டில் சென்று உங்கள் ஏர்செல் எண் மற்றும் 5 இலக்க சிம் நம்பரையும் பதிவு செய்தால் UPC code வந்துவிடும், இந்த முயற்சியை கம்ப்யூட்டர் உதவியுடன் செய்வது நலம். மொபைலில் முயற்சிப்பது உங்கள் அதிஷ்டத்தை பொருத்தது.

வோடஃபோன் நெட்வொர்க் மாற விரும்பும் ஏர்செல் வாடிக்கையாளர்கள், போர்ட் குறுஞ்செய்தி இல்லாமல் எளிதில் அதே நம்பருடன் வோடஃபோன் வாடிக்கையாளராக மாறுவதற்கு அந்த நிறுவனம் புதிய ஏற்பாடு ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு உங்கள் ஏர்செல் எண், ஏர்செல் சிம்மிற்கு பின்னால் உள்ள கடைசி 5 இலக்க எண்கள், மற்றும் உங்கள் ஆதார் எண், இந்த மூன்றும் உங்கள் கையில் இருந்தால் போதும், போர்ட் நம்பர் உங்களிடம்தான் உள்ளது. எளிதாக வோடஃபோன் நெட்வொர்க்கிற்கு மாறி விடலாம்.

மேலே சொல்லப்பட்ட விதிகளின்படி உங்கள் சிம்குக்கு பின்னால் உள்ள 5 இலக்க எண்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஐந்து எண்களில் பூஜ்ஜியம் இல்லாமல் இருந்தால் அதுதான் உங்களது UPC code நம்பர். பூஜ்ஜியம் வந்தால் என்ன செய்வது என்பது பற்றி கடைசியாக பார்க்கலாம். "54321" இந்த எண்கள் தான் உங்கள் சிம்குக்கு பின்னால் உள்ள கடைசி 5 இலக்க எண்கள் என வைத்துக் கொள்வோம், அந்த எண்களுக்கு முன்னால் DT1 என சேர்த்துக் கொள்ளுங்கள், அதாவது "DT154321" இதுதான் உங்களது போர்ட் நம்பர். இத்துடன் ஆதார் எண்ணையும் எடுத்துக் கொண்டு வோடஃபோன் ஸ்டோருக்கு செல்ல வேண்டியது தான்.

அடுத்து பூஜ்ஜியம் நம்பர் உள்ள சிம்முக்கு வருவோம், ஒருவேளை அந்த 5 எண்களில் ஒரு பூஜ்ஜியம் வந்தால் கூட அது உங்கள் போர்ட் நம்பர் அல்ல, உதாரணமாக "50432" என உள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்படி பூஜ்ஜியம் வரும் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே போர்ட் நம்பர் தான் கொடுக்கப்படுகிறது. அது, DT12345. இந்த நம்பருடன் நீங்கள் வோடஃபோன் கடைக்கு சென்று இந்த நம்பரை போர்ட் நம்பராக கொடுத்து, புது சிம் வாங்கிக் கொள்ளாலாம், கடைக்காரர் ஆன்லைனில் போர்ட் நம்பரை எண்டர் செய்யும் கட்டத்திற்கு கீழே "மெயில் ஐடி" கேட்கப்படும், அதில் உங்கள் சிம்முக்கு பின்னால் உள்ள "50432" என்ற எண்ணுடன் சேர்த்து "50432@gmail.com" என கொடுத்தால் போதும், பிராஸஸிங் சக்ஸஸ்.

உங்கள் பழைய ஏர்செல் நம்பரை வோடஃபோனுக்கு மாற்றி உங்கள் ஏர்செல் நம்பரை தக்க வைத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள். "இது ஒரு சேவை நோக்கத்துடன் கூடிய விழிப்புணர்ச்சியே அன்றி... வோடஃபோன் விளம்பரம் அல்ல"

மேலும் BSNL மூலமாக போர்ட் நம்பர் பெற விரும்புகிறவர்கள் BSNL சிம் உள்ள மொபைல் மூலம், அல்லது லேண்ட்-லைன் மூலம் 1503 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அதில் சொல்லப்படும் கணினி குரல் வழிகாட்டியை பின்பற்றி, போர்ட் நம்பர் பெறலாம். அதனிடம் தெரிவிக்க உங்கள் ஏர்செல் எண், மற்றும் வேறொரு மொபைல் எண் தேவை, நீங்கள் சொல்லப்போகும் இன்னொரு மொபைல் எண்ணுக்கு UPC code 48 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்படும். ஆனால், இந்த கணினி குரல் வழிகாட்டி முறைகளில் முயற்சித்தவர்கள் பலர், பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பில் சேர முடியவில்லை என புகார் சொல்வதை கேட்க முடிகிறது, அதனால் பல முறைகளில் முயற்சித்து தோல்வியை தழுவினவர்களுக்கு மேலே சொன்ன "ஏர்செல் டூ வோடஃபோன்" விளக்கம் உதவிகரமாக இருக்கலாம்.

மேலும், ஐடியா மற்றும் BSNL நிறுவனங்கள் போர்ட் நம்பர் இல்லாமலே ஏர்செல் வாடிக்கையாளர்களை தங்கள் நெட்வொர்க்கில் இணைப்பதாகவும் செய்திகள் உலாவுகின்றன, எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளாதாக இல்லையென்றாலும், பயன்பெற வேண்டிய ஒன்றரை கோடி ஏர்செல் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த செய்தியை பலருக்கும் பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

- நன்றியுடன் பழைய ஏர்செல் வாடிக்கையாளன்

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்