கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரியல்மீ க்யூ2 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட வடிவமாக ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி தகவல்தொடர்பு வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மார்ச் 4ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் தளங்களிலும் முன்னணி நேரடி அங்காடிகளிலும் விற்பனையாகும்.
ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம் : இரட்டை நானோ சிம்
தொடுதிரை : 6.5 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)
ரெஃப்ரஷ் விகிதம்: 120 Hz
பிரைட்நஸ் : 600 nits
இயக்கவேகம் : 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் அதிகரிக்கும் வசதி)
முதன்மை காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா : 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)
(அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ ஷூட்டர் வசதி கொண்டவை)
பிராசஸர் : மீடியாடெக் டைமென்சிட்டி 800யூ SoC
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ரியல்மீ யூஐ
மின்கலம் : 5000 mAh
சார்ஜிங் : 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
எடை : 194 கிராம்
6 ஜிபி+64 ஜிபி வகை ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999/- ஆகும். 8 ஜிபி + 128 ஜிபி வகை ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/- ஆகும்.