மி ஸ்மார்ட் போன்கள் அதிரடி விலை குறைப்பு

ஸோமி நிறுவனம் தனது தயாரிப்புகளான ரெட் மி நோட் 5 ப்ரோ, மி ஏ2, ரெட் மி ஒய் 2 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையை ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

இந்தியாவில் முதலிடம்

தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட் போன் விற்பனையாளர் என்று ஸோமி நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத அறிக்கையில் சர்வதேச தரவு நிறுவனம் (IDC) இதை தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை கொண்டாடும் விதமாக ஸோமி விலைகுறைப்பை அறிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"எங்களது சில தயாரிப்புகளுக்கான மூலப்பொருள்களின் விலை குறைந்துள்ளதால், நாங்களும் விலைகளை குறைத்துள்ளோம்," என்று ஸோமி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் மி 6 விலை உயர்வு

ரெட் மி 6 ரக போன்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் 5 ரக போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
2ஜிபி RAM மற்றும் 16ஜிபி சேமிப்பளவு கொண்ட ரெட் மி 6ஏ, 600 ரூபாய் விலை உயர்ந்து 6,599 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதில் சேமிப்பளவு 32ஜிபி உள்ள போனின் உயர்த்தப்பட்ட புதிய விலை 7,499 ரூபாயாகும். 3ஜிபி RAM மற்றும் சேமிப்பளவு 32ஜிபி கொண்ட ரெட் மி 6 போனின் விலை 8,499 ரூபாயாகும்.

விலை குறைப்பு விவரம்

விலை குறைப்புக்குப் பின்னர், 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி சேமிப்பளவுடைய ரெட் மி நோட் 5 ப்ரோ 13,999 ரூபாய்க்கும், 6ஜிபியுடன் 64ஜிபி கொண்ட போனின் விலை 15,999 ரூபாயாகும்.

மி ஏ2 வகையில் 4ஜிபி RAM உடன் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.15,999-க்கும், 6ஜிபியுடன் 128 ஜிபி கொண்ட போன் ரூ.18,999-க்கும் கிடைக்கிறது. ரெட் மி ஒய்2 ரகத்தில் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி கொண்ட போன் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் குறைக்கப்பட்ட விலை 11,999 ரூபாயாகும்.

மி பவர்பேங் 2ஐ மற்றும் மி ஸ்மார்ட் தொலைக்காட்சி இவற்றின் விலை அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds