விநாயகர் சதுர்த்தி... பால் கோவா கொழக்கட்டை ட்ரை பண்ணுங்க

பால் கோவா கொழக்கட்டை போரிங் அரிசி கொழுக்கட்டை வேண்டாம்

Sep 12, 2018, 17:44 PM IST

நாளைக்கு விநாயகர் சதுர்த்தி, இப்பவே என்ன ஸ்பெஷல் செய்யலாம்னு ஒரு பிளான் பண்ணிருப்பீங்க. எப்பவும் போல பண்ணாம இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா பால்கோவா கொழுக்கட்டை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :  

மேல் மாவு செய்ய:

கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

பூரணம் செய்ய:

இனிப்பு கோவா - ஒரு கப்,

உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.

செய்முறை :

தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்

ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.

மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.  

சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.

You'r reading விநாயகர் சதுர்த்தி... பால் கோவா கொழக்கட்டை ட்ரை பண்ணுங்க Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை