திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைவது உறுதியாகவிட்டது. இதனையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க வந்திருக்கிறார் பாரிவேந்தர்.
இதைப் பற்றிப் பேசும் ஐஜேகே பிரமுகர்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தோம். அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள தொகுதிகளுக்கான செலவுகளையும் பாரிவேந்தர் பார்த்துக் கொண்டார்.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஐஜேகே கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் கடும் கோபத்தில் இருந்தார் பாரிவேந்தர்.
இந்தமுமறையும் அதிமுக கூட்டணிக்குள் அவரைக் கொண்டு வரும் வேலைகள் நடந்தன. எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் ஏன் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம்.
திமுக தரப்பில் இருந்தும் எங்களை அணுகினார்கள். இதைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது. பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இன்றைய சந்திப்பின் முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் என்கின்றனர்.
-அருள் திலீபன்