தமிழ்நாட்டை குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்றும் ஆளும் கட்சி... ஸ்டாலின் கடும் கண்டனம்

Advertisement

தமிழ்நாட்டையே குலைநடுங்க வைக்கும் வகையில் செயல்பட்ட பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை ஆளும் கட்சியினர் காப்பாற்ற முயற்சிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. சில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன.

இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் நக்கீரன்-ஜூனியர்விகடன் போன்ற பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது. காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது.

தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>