ரிஷாப் பாவம் சின்னப் பையன் விட்டுடுங்க....தோனியோட கம்பேர் பண்ணாதீங்க...ஆறுதல் அளிக்கும் தவான்

India Australia ODI, Dhavan supports Rishab pant

by Nagaraj, Mar 11, 2019, 16:25 PM IST

மொகாலி ஒரு நாள் போட்டியில் நல்ல ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷாப் பாண்ட் தவற விட்டதாலேயே இந்தியா தோற்றது என்று கூறி அவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஏகத்துக்கும் வறுத்தெடுக்கின்றனர். ரிஷாப் பாவம் சின்னப் பையன்... தோனியோட கம்பேர் பண்ணி வளரும் பிள்ளையை நோகடிக்காதீர்கள் என்று ஷிகர் தவான் ஆறுதலுக்கு வந்து கை கொடுத்துள்ளார்.

மொகாலியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது.

359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர்.

ஆஸ்திரேலியாவும் தட்டுத்தடுமாறி ஆடினாலும் ஒரு கட்டத்தில் தேவையான ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போதுதான் இந்தியாவின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுவது போல் ஆஸி.அணியின் டர்னர் அதிரடியாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார். டர்னர் 38 ரன்கள் எடுத்திருந்த போது 44வது ஓவரை ச கால் வீசினார். அப்போது அருமையான ஸ்டம்ப்பிங் வாய்ப்பை ரிஷாப் தவற விட்டு விட்டார். இதன் பின்னர் மளமளவென ரன் குவித்த டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி 2 ஓவர்கள் பாக்கி இருக்கும் போதே ஆஸி அணியை வெற்றி பெறச் செய்து விட்டார்.

இந்தியாவின் தோல்விக்கு ரிஷாப் தவறவிட்ட ஸ்டம்பிங்கே காரணம் .இந்நேரம் தோனி இருந்திருந்தால் கதையே வேற.. என்ற லெவலில் ரிஷாப்பை வறுத்தெடுத்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் அபார சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிஷாப் பாண்ட்டுக்கு ஆதரவாக ஆறுதல் குரல் கொடுத்துள்ளார். ரிஷாப் பாவம் சின்னப் பையன்.. இப்போது தான் வளர்ந்து வருகிறான் ... தோனி என்ற மலையுடன் அவனை ஒப்பிடாதீர்கள்.. மைதானத்தில் தோனி ..தோனி... என்று கூச்சல் போடும் போதெல்லாம் ரிஷாப் கவனம் சிதறி விடுகிறது. வளர்ந்துவரும் பிள்ளையை இப்படியெல்லாம் மட்டம் தட்ட வேண்டாம் .. ரிஷாப்பை ஊக்கப் படுத்த வேண்டியது நமது கடமை என்று ரிஷாப்புக்கு ஆதரவாக ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார்.

You'r reading ரிஷாப் பாவம் சின்னப் பையன் விட்டுடுங்க....தோனியோட கம்பேர் பண்ணாதீங்க...ஆறுதல் அளிக்கும் தவான் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை