மக்களுக்கான செயலியை வெளியிட்ட தமிழ்நாடு காவல்துறை !

by Loganathan, Sep 15, 2020, 20:21 PM IST

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதள வசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலி தமிழ்நாடு காவல் துறையால் இணைந்து Amtex உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற் நுட்பங்கள்

“KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அவசரத் தேவையின் போது, அந்த கைப்பேசியை அதிரச் செய்தாலே, காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் “KAVALAN SOS” செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள், நண்பர்கள் எண்ணிற்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்

KAVALAN Dial 100 100

“KAVALAN Dial 100 100” அழைப்பு செயலியைப் பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அவசரக் காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தங்களுடைய இருப்பிட தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும்.

பயன்கள்

  • அனைத்து Android மற்றும் iPHONE – களில் பயன்படுத்தலாம்.
  • அவசர உதவிக்கு SOS பட்டனைத் தொட்டாலே போதும்.
  • அழைப்பவரின் இருப்பிடம் உடனே GPS மூலம் அறியப்படும்.
  • அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் SPMCR-ல் உள்ளது.
  • அழைப்பவரின் கணநேரம் கண்காணிப்பு (Real Time Traking) வசதி உள்ளது.
  • அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும்.
  • காவலன் SOS பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைப்பேசி கேமரா தானாகவே 15 வினாடிகள் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்துக் காவல் கட்டுப்பாட்டு மையத்தில் அனுப்பிவிடும்.
  • இணைய இணைப்பு இல்லாத (Data available Places) இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை Auto SMS Alert) மூலமாகச் செயல்படும்.
  • அதிர்வு தூண்டல் (Shake Trigger) வசதியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளின் வசதி உள்ளது.

READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை