துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. எனினும் தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு பொது முடக்கத்திற்கு முன்னரே பள்ளிக்கல்வித் துறை சார்பில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்தி முடித்து, அதற்கான முடிவையும் வெளியிட்டது.பின்னர் இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், துணைத்தேர்வும் அரசு சார்பில் நடத்தப்பட்டது.

இந்த துணைத்தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த துணைத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்களின் நகலை இன்று முதல் http://www.dge.tn.gov.in இந்த இணையதளத்தில் சென்று மாணவரின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத்துறை சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் notification பகுதியில் Application for Retotaling/Revaluation என்ற பகுதியைச் சொடுக்கி அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களை எடுத்து 19.11.2020 (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 20.11.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு பாடம் ( ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505 மட்டும்

மறுகூட்டல் உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ. 305

மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :