தேஜஸ், திருச்சி - ஹவுரா, சென்னை - பெங்களூரு ஏசி இரண்டடுக்கு மற்றும் சென்னை - சாப்ரா வண்டிகளின் அட்டவணை மாற்றம் மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே இதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
1. 02664/02663 திருச்சி - ஹவுரா - திருச்சி அதிவேக விரைவு சிறப்பு வண்டி.
திருச்சியில் இருந்து 01.12.2020 முதல் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மறு நாள் இரவு 11.45 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
ஹவுராவில் இருந்து 03.12.2020 அன்று மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் அதிகாலை 02.50 மணிக்கு திருச்சி சென்றடையும்.
2. 06075/06076 சென்னை - பெங்களூரு - சென்னை குளிர்சாதன இரண்டடுக்கு அதிவேக விரைவு சிறப்பு ரயில்.
சென்னையில் இருந்து 04.12.2020 முதல் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 1.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
பெங்களூரில் இருந்து 04.12.2020 முதல் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 8.25 மணிக்கு சென்னை சென்றடையும்.
3. 02613/02614 சென்னை - மதுரை - சென்னை தேஜஸ் அதிவேக விரைவு சிறப்பு வண்டி.
சென்னையில் இருந்து 04.12.2020 முதல் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
மதுரையில் இருந்து 04.12.2020 முதல் மதியம் 3.00 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 9.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
4. 02669/02670 சென்னை - சாப்ரா - சென்னை அதிவேக விரைவு சிறப்பு வண்டி.
சென்னையில் இருந்து 30.11.2020 முதல் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 9.35 மணிக்கு சாப்ரா சென்றடையும்.
சாப்ரவில் இருந்து 02.12.2020 முதல் இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
பதிய சிறப்பு ரயில்:
1. 06340/06339 நாகர்கோவில் - மும்பை - நாகர்கோவில் விரைவு சிறப்பு வண்டி (வாரத்தில் நான்கு நாட்கள்) வழி மதுரை, கரூர், சேலம், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி ரோடு, தர்மாவரம், குண்டக்கல்.
நாகர்கோவிலில் இருந்து 07.12.2020 காலை 6.00 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
மும்பையில் இருந்து 08.12.2020 முதல் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.