திருமணமானவர்கள் முதல் மூன்று நாட்கள் வரை கழிப்பறையை பயன்படுத்த கூடாது என்ற புதிய பழக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது இரண்டு மனங்களும் ஒன்று சேருவது. அந்தந்த சமூகத்தின் மக்கள் அவர்களது பழக்க வழக்கங்களை பின்பற்றி திருமண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவார்கள். அதுபோல இந்தோனேசியாவில் நாம் இது வரைக்கும் கேள்விப்படாத வினோதமான ஒரு பழக்கவழக்கத்தை வாழையடி வாழையாக பின்பற்றி வருகின்றனர்.
திருமணமானவர்கள் முதல் மூன்று நாட்கள் கழிப்பறை பக்கம் எட்டிக்கூட பார்க்கக்கூடாதாம். சாப்பிட உணவு மற்றும் குடிக்க தண்ணீர் போன்றவற்றை கூட குறைந்த அளவு தான் கொடுக்கப்படும். இது இந்தோனேசியாவில் வாழ்கின்ற திடோங் சமூகத்தை சேர்ந்த மக்கள் கண்ணும் கருத்தாய் பின்பற்றி வருகின்றனர். கல்யாணம் முடிந்தப்பின் மணமகள், மணமகன் இருவரும் 24 மணி நேரமும் உறவினர்களின் கண்பார்வையில் இருப்பதால் அவர்களால் இந்த பழக்கத்தை மீறவே முடியாது.
இப்படி செய்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் இந்த பழக்கம் நடைபெற்று வருகிறதாக அந்த மக்கள் கூறுகின்றனர். இது போல பழக்கங்களை கடைப்பிடித்தால் கணவன், மனைவிக்கு இடையே சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் கடைசி காலங்கள் வரை ஒற்றுமையாக வாழ்வார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது.