மறக்கப்பட்ட மனிதர்.. வளர்ப்பு மகன் சுதாகரன்...

வளர்ப்பு மகன் - இந்த வார்த்தையைச் சொன்னாலே வி.என். சுதாகரன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இந்த வார்த்தை ஒரு உச்சக்கட்ட முக்கியத்துவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் வி.என். சுதாகரன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அடையாளம் காட்டப்பட்டவர். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இவரும் அவரைப்போலவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி இன்னும் சிறையில் இருந்து வருகிறார். அபராதமான 10 கோடி ரூபாயைச் செலுத்தாததால் இவருக்குமட்டும் சிறைக்கதவு இன்னும் திறக்கப்படவில்லை. குடும்பத்தினரும் ஏனோ இவரைக் கண்டு கொள்ளவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி பெங்களூருவில் இருந்து வழிநெடுக உற்சாக வரவேற்புடன் திங்கட்கிழமை சென்னைக்கு வந்தார் சசிகலா.அவர் சென்னை வந்து சேர்வதற்குள் அவரை வரவேற்கச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து களையெடுக்கும் படலமும் ஆரம்பமானது.சசிகலா வருகை குறித்த செய்திகள் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்தாலும், அவர்களோடு சிறைக்குச் சென்ற வி.என்.சுதாகரனைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவர் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானது 91 முதல் 96 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் தான். இதற்குக் காரணம் சுதாகர் அண்ணா வளர்ப்பு மகன் என்று தத்தெடுத்து அவருக்குத் தமிழகமே வியக்கும் வண்ணம் திருமணம் செய்து வைத்ததுதான். நான் செய்த மிகப்பெரிய தவறு இந்தத் திருமணம் தான் என்று ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் மனம் திறந்தமனம் திறந்து ஒப்புக்கொண்டார். அந்த திருமணம் உலக அளவில் பேசப்பட்டாலும் அதுவே அவரது ஆட்சியில் வீழ்ச்சிக்குக் காரணமாகிப்போனது.சசிகலாவுக்கு சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதா மணி, திவாகரன் ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இவர்களில் வனிதா மணியின் பிள்ளைகள்தான் டி.டி.வி.தினகரன், வி.என்.சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர்.

இவர்களில் ஒருவரான சுதாகரனைத்தான் தந்து வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார் ஜெயலலிதா. அதாவது பின்னாளில் ஜெயலலிதாவின் வாரிசாக இவர்தான் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த தத்தெடுப்பு படலம் நடத்தப்பட்டது. ஆனால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி சுதாகரன் தத்தெடுக்கப்படவில்லை. காரணம், சுதாகரன் தத்தெடுக்கப்பட்ட நேரத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி சத்திய லட்சுமியை மணமுடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிவாஜி கணேசனுக்குத் துளிகூட உடன்பாடில்லை என்றபோதிலும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போதுதான் விலை உயர்ந்த நகைகளை அணிந்து ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்து வந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது .

இதன் காரணமாக, சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் போது சிவாஜி குடும்பமே பெரும்பாலான திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டதாக ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.1996ல் நடந்த தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதா போட்டியிட அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சுகவனம் அவரை தோற்கடித்தார். யாருமே எதிர்பார்க்காத சுக வனத்தின் இந்த வெற்றியை திமுக தலைவர் கலைஞர்`யானையின் காதில் புகுந்த எறும்பு' என்று வர்ணித்தார். பின்னர் 2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைத்ததும் அதே வளர்ப்பு மகன் மீது போதைப் பொருள், கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக வழக்குகளும் தொடரப்பட்டது.

வேதா இல்லத்தைப் பொறுத்தவரை ஒரே இடத்தில் ஒருவர் உச்சாணிக் கொம்பிற்குச் செல்வதும் அதே ஒரு நிமிடத்தில் ஒருவர் முகவரியே இல்லாமல் போவதும் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று. தனது அரசியல் வாழ்வுக்கு இந்தத் திருமணம் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியதால் தத்துப் பிள்ளை ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டார். அதன் பின்னர் நற்பணி மன்றங்களைத் தொடங்கி. தன்னைதானே `சின்ன எம்.ஜி.ஆர்' என அழைத்துக் கொண்டார்.சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரியில் சசிகலா, இளவரசியோடு சுதாகரனும் ஜெயிலுக்கு போனார்.

சசிகலாவுக்கு முன்னரே விடுதலையாக வேண்டிய சுதாகரன், இன்னமும் சரி தான் உள்ளார். தனக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்கக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி, `சுதாகரன் இன்னும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தைச் செலுத்தவில்லை. அவர் அபராதம் செலுத்திய பின், இவ்வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருந்த நாள்களைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே விடுவிக்க அனுமதி வழங்கப்படும்' என உத்தரவிட்டார். ஆனாலும், சுதாகரனுக்காகப் பணம் செலுத்த யாருமே முன்வரவில்லை.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராம் பெங்களூரு புகழேந்தி சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்ட அன்று உடனிருந்தவர். சசிகலா மற்றும் இளவரசியின் தண்டனைக் காலம் முடிந்து அபராதத் தொகையைச் செலுத்தி வெளியில் வந்துவிட்டனர். சுதாகரன் மட்டும் வெளியே வராமல் வைத்திருப்பது மனிதாபிமானமான செயல் அல்ல. தினகரனுக்கும் பாஸ்கரனுக்கும் பணமில்லையா என்ன? சுதாகரனுக்காக அபராதம் செலுத்த ஏன் மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :