அமெரிக்காவில், 72 வயது பாட்டியை 19 வயது இளைஞர் காதல் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம், “காதலுக்கு வயது ஒரு தடையில்லை தான்.. அதற்கென்று இப்படியா..?” என்று அனைவரிடையே கேள்வியுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா (72). இவர், கடந்த 2016ம் ஆண்டு முதல் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அல்மேடா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்துள்ளார்.
அப்போது, இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. இது பின்நாட்களில் காதலாக மலர்ந்துள்ளது. இதன் பிறகு, ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தால், இருவரது குடும்பமும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், இரண்டு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி கேரியும் அல்மோவும் திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 58 வயது வித்தியாசத்தில் செய்துக்கொண்ட திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆன அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.