எந்த மாதிரி பிள்ளையார் வாங்கினால் வீட்டுக்கு யோகம்?

விநாயகர் சதுர்த்தி இப்பவே கலைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சி. தெரு முழுவதும் விழாக்கோலம். நாளைக்கு என்ன வாங்கலாம்னு முடிவு பண்ணி வாங்க ஆரம்பிசிட்டோம். அதுல முதல இருக்கிறது விநாயகர் சிலைதான்.

நமக்கு தெரிந்தது விநாயகர் சிலை வாங்குவோம். பூஜை அறையில வச்சி பூஜை பண்ணுவோம். பத்து நாட்கள் தொடர்ந்து பூஜை பண்ணி மறுநாள் கிணறு, ஏரி என ஏதாவது ஒண்ணுல விநாயகரை கரைப்போம்.

அவ்ளோதான், ஆனால் இதில நிறையோ கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கு விநாயகர் வாங்கும் போது.அதிலும் விநாயகர் சதுர்த்தி அப்போ வாங்கும் போது ஒரு சில விஷயம் கவனித்து வாங்கும் போது நமக்கு யோகம் தருமாம்.

அது என்னென பார்ப்போம்.

நிற்கும் (அ) உட்கார்ந்த பிள்ளையார்:

பிள்ளையாரைப் பொருத்தவரையில் ஏராளமான போஸ்களில் நிறைய மாடல்களில் செய்து வைத்திருப்பார்கள். நமக்கே குழம்பி விடும் எதை வாங்குவது என்று. அதனால் குழம்பாமல் இதை கவனியுங்கள்.

வீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் படி வாங்குங்கள். அதுதான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடமென்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள்.

அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால், செல்வ வளம், பொருளாதாரம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரயச் செலவுகள் குறையும். நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால், தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தும்பிக்கை:

நாம் வாங்கும் பிள்ளையாரின் தும்பிக்கை வலப்புறமாக திரும்பியிருக்கிறதா, இடப்புறமாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். மிக சிறிய பிள்ளையார் சிலையில் பெரும்பாலும் நடுநிலையாகக் கூட இருக்கும். அப்படி இருப்பதை வாங்கக் கூடாது. இடதுபுறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குங்கள்.

கொழுக்கட்டை ஏந்திய எலி

பிள்ளையாரின் வாகனம் எலி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிள்ளையார் சிலை வாங்கும் போது இந்த எலியை நாம் வாங்க மறந்துவிடுகிறோம். அப்படி எலியையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால், எலி கையில் கொழுக்கட்டை வைத்திருக்கும்படி வாங்குங்கள்.

எதில் செய்யப்பட்டது?

நல்ல களிமண்ணால் செய்தது என்றால் மிகச்சிறப்பு. குறிப்பாக, மற்றொரு விஷயம். மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக் கூடாது. ஏன் நம் வீட்டு பூஜையறையிலேயே அதை வைத்திருக்கக் கூடாது.

பிள்ளையார் நிறம் பிள்ளையாரைப் பொருத்தவரை ஏராளமான மின்னும் வண்ணங்களில் தயார் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.

ஆனால் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். அது உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!