தீபாவளி ஸ்பெஷல்: செல்வங்களை அள்ளித்தரும் கேதார கௌரி விரதம்

Diwali special: Kedara Gowri pooja

by Manjula, Nov 5, 2018, 19:49 PM IST

கேதார கௌரி விரதம் சிவபெருமானை நோக்கி செய்யப்படும் விரதங்களில் ஒன்று,பொதுவாக பெண்கள் தனது கணவனுடன் இணைபிரியாது வாழவும், மணமாகத பெண்களாக இருந்தால் நல்ல கணவன் கிடைக்க வேண்டி விரதம் இருப்பார்கள்.

இமயமலை உள்ள கேதாரம் என்ற திருத்தலத்தில் சிவபெருமானை வணங்கி பார்வதி தேவி அதாவது "கௌரி "விரதத்தினை மேற்கொண்டார், அதனால் அந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் வந்தது, இந்த விரதம் மேற்க்கொண்டதால் தான் உலகை காத்து ரட்சிக்கும் சிவ பெருமானுக்கு சமமான நிலையில் அன்னை பார்வதிதேவி பராசக்தியாகப் போற்றப்படுகிறார்கள்

சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து சிவனின் இடது பக்கம் பாதி உடம்பை பெறக்காரணம் கேதார கௌரி விரதமாகும்.

புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் சதுர்த்தசி (ஐப்பசி தீபாவளி அமாவாசை ) 29 நட்கள் விரதம் இருக்க வேண்டும், இந்த விரதம் எடுப்பவர்க்ள் சிவ-பார்வதியால் சகள சௌபாகியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என புராணங்கள் கூறுகின்றன

தீபாவளிப் பண்டிகை பூஜைகள் முடிந்த பின் பூஜையறையில் விளக்கேற்றி சிவன் பார்வதி படத்தின் முன்பு அமர்த்தி தியானம் செய்ய வேண்டும், ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை நாள் முழுவதும் துதிக்க வேண்டும்.

விரதம் ஆரம்பித்த நாளிலிருந்து 29 இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளில் அந்த நூலைக்கொண்டு ஆண்களின் வலது கையிலும், பெண்களின் இடதுகையிலும் அணிந்து கொள்வார்கள், மேலும் 20 நாளும் ஒரு பொழுது, உணவருந்தி சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயதிற்கு முன் குளித்து முடித்து உணவருந்தி விரதத்தை முடிப்பார்கள்.

You'r reading தீபாவளி ஸ்பெஷல்: செல்வங்களை அள்ளித்தரும் கேதார கௌரி விரதம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை