தோனி - கோஹ்லி படை மோதும் ஐபிஎல் முதல் போட்டி : டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்க இரவு முதல் குவிந்த ரசிகர்கள் விடிய, விடிய வரிசையில் காத்திருந்தனர்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா வரும் 23-ந் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தற்போதைய சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தோனி - கோஹ்லி படை மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ரூ 1300 முதல் 6500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளே கவுண்டரில் வழங்கப்படுவதாலும், ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கிடையாது என்பதாலும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானம் முன் நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரண்டனர். விடிய, விடிய ரசிகர்கள் வரிசையில் கண் விழித்து காத்திருந்தனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்