ஐபிஎல்-லில் தொடர் தோல்வியால் தகுதியற்றவர்களாக ஆகி விடுவோமா? பார்திவ் பட்டேல்

royal challengers bangalore team wicket keeper talks about today match

by Suganya P, Apr 5, 2019, 03:00 AM IST

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வியை சந்துத்து வருவதால், தங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல என பெங்களூரு அணி வீரர் பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு  இடையே இன்று நடைபெறுகிறது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இன்று, சொந்த மைதானத்தில் நடக்கும் 5-வது போட்டியிலாவது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு அணியின் கீப்பர் பார்திவ் பட்டேல், ‘விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்ததை சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. 0-4 என கணக்கில், புள்ளி பட்டியளில் கடைசியாக இருக்கிறோம். இது உண்மைதான். ஆனால், இதே நிலை தொடராது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிகாட்டுவார்கள். தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தால், நாங்கள் தகுதியற்றவர்கள் என்றாகி விடாது’ என பேசினார்.

 

You'r reading ஐபிஎல்-லில் தொடர் தோல்வியால் தகுதியற்றவர்களாக ஆகி விடுவோமா? பார்திவ் பட்டேல் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை