`முதலில் கோபப்பட்டார் பின்னர் கட்டியணைத்தார் - தோனி குறித்து சிலாகிக்கும் தீபக் சஹார்

deepak chahar talks about 19th over controversy

by Sasitharan, Apr 8, 2019, 20:17 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் சி.எஸ்.கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 160 ரன் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 161 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி, கடைசி 2 ஓவரில் 39 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது 19வது ஓவரை வீச வந்தார் தீபக் சாஹர். இக்கட்டான நிலையில் பந்துவீச வந்த அவர் முதல் இரண்டு பந்துகளிலும் சொதப்பினார். அவர் வீசிய முதல் பந்து பாதியிலேயே கையில் இருந்து நழுவி, ஃபுல்டாஸ் பாலாக பேட்ஸ் மேனிடமிருந்து விலகி பவுண்டரியானது. அம்பயர் நோ-பால் என அறிவிக்க ப்ரீ ஹிட் வேறு கொடுக்கப்பட்டது. அதனால், 5 ரன்கள் பஞ்சாப் அணிக்கு சேர்ந்தது. ஸ்லோ பால் போட முயன்று, முதல் இரண்டு பந்துகளிலும் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக நோ பால் போட்டார்.

டென்ஷன் ஆன தோனி, நேராக சாஹரிடம் வந்தார். கையை நீட்டி பேசி ஏதேதோ ஆலோசனைகளை கூறினார். அப்போது சாஹர் மிகவும் பரிதாபமாக இருந்தார். எப்படியோ, அடுத்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இந்த காட்சிகள் வைரலாகியது. இதற்கிடையே தோனி அந்த நேரத்தில் என்ன பேசினார் என்பது குறித்து தீபக் சாஹர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ``ஸ்லோ பால் போட தான் நினைத்தேன். ஆனால் பந்து கையைவிட்டு நழுவிச் சென்றுவிட்டது. சரி இரண்டாவது பந்தாவது சரியாக போடலாம் என நினைத்து முதல் பந்துபோலவே முயற்சித்தேன். ஆனால் அதுவும் நோ-பாலாகிவிட்டது. உடனே சுதாரித்து கொண்டுவிட்டேன். தவறு இல்லாமல் ஒழுங்காக பந்து வீசினேன்.

தோனி அறிவுரைகள் கூறினார். சிறப்பாக பந்துவீசுமாறு வலியுறுத்தினார். கோபப்பட்டாலும் போட்டி முடிந்த பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து என்னை பார்த்து சிரித்தது மட்டுமில்லாமல் என்னை கட்டியணைத்து சிறப்பாக பந்துவீசினேன் என பாராட்டினார். மற்றவர்களும் எனது பௌலிங்கை பாராட்டினார்கள். கடந்த ஆண்டு சென்னை கோப்பையை கைப்பற்றியதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் பெருமையாக இருக்கிறது. அதேபோல் இந்த ஆண்டும் சென்னை அணி கோப்பையை கைப்பற்றும். அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன். குறிப்பாக கடைசி ஓவர்களில் பதற்றம் இல்லாமல் சிறப்பாக பந்துவீச முயல்வேன்" எனக் கூறியுள்ளார்.

You'r reading `முதலில் கோபப்பட்டார் பின்னர் கட்டியணைத்தார் - தோனி குறித்து சிலாகிக்கும் தீபக் சஹார் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை