விஜய் சங்கர் தேர்வை கிண்டல் செய்து டுவிட்டர் பதிவு இட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவரின் ஒருநாள் போட்டி சராசரி 40க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இடம்கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக தமிழக இளம் வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த தேர்வுக்குழுத்தலைவர் எம்எஸ்கே பிரசாத், ``‘‘Vijay Shankar offers is three dimension (3D). அதாவது, ``பேட்டிங், பீல்டிங், பௌலிங் என மூன்று டைமன்சன்களிலும் (3டி) சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனாலேயே ராயுவுடுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்தோம். விஜய் சங்கர், அணிக்குப் பல ஆப்ஷன்கள் கொடுக்கிறார்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தக் கருத்தை கிண்டல் செய்யும் விதமாக அம்பதி ராயுடு டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டார். அதில், ``உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர் பிரசாத், ``விஜய் சங்கர் மூன்று டைமன்சன்களிலும் (3டி) விளையாடுகிறார்" எனக் குறிப்பிட்டதைக் கிண்டலடிக்கும் விதமாக ராயுடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.