கோலியின் சதத்துக்கு முன் சரண்டர் ஆன நைட்ரைடர்ஸ் – 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

Kohlis century helps RCB to beat Kolkatta Knight Riders

by Mari S, Apr 20, 2019, 07:34 AM IST

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், இரண்டாவது வெற்றியை போராடி பதிவு செய்துள்ளது பெங்களூர் அணி.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி இறுதி வரை அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு துணையாக அதிரடி ஆட்டத்தை ஆடிய மொஹின் அலி 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 66 ரன்கள் எடுத்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார்.

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் லின்(1), சுனில் நரைன்(18), சுப்மன் கில்(9), உத்தப்பா(9) என சொற்ப ரன்களில் அதிக பந்துகளை வீணடித்து அவுட்டாகினர். இவர்களில் யாரேனும் ஒருத்தர் பந்துகளை வீணடிக்காமல் அவுட் ஆகி இருந்தால் கூட அதற்கு அடுத்து களமிறங்கிய ராணா மற்றும் ரஸல் ஜோடி கொல்கத்தா அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கும்.

முதல் 4 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், களமிறங்கிய ராணா மற்றும் ரஸல் ஜோடி சிக்ஸர் மழையை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பொழிய வைத்தனர்.

46 பந்துகளில் 5 சிக்ஸர் 9 பவுண்டரிகள் என பொளந்து கட்டிய நிதிஷ் ராணா கடைசி வரை அவுட்டாகாமல் 85 ரன்கள் அடித்தார்.

சிக்ஸர் மெஷின் என அழைக்கப்படும் ஆண்ட்ரூ ரஸல், 25 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.

பெங்களூர் அணியில் பேட்டிங் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அந்த அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசம் என்பதற்கு நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் விட்டுக் கொடுத்த ரன்களை விட 16 எக்ஸ்ட்ரா ரன்களையும் போட்டுக் கொடுத்தது அவர்களின் நிலையை மேலும் எடுத்துக் காட்டியது.

20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி 203 ரன்கள் எடுத்து வெற்றியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தவறவிட்டது. அதற்கு முக்கிய காரணம் முதலில் ஆடிய 4 பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் பந்துகளை வீணடித்ததுதான்.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் பெற்ற இரண்டாவது வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதே கடைசி இடத்தில் நீடிக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா அட்டகாசம்; 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை அணி!

You'r reading கோலியின் சதத்துக்கு முன் சரண்டர் ஆன நைட்ரைடர்ஸ் – 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை