ஐபிஎல் போட்டியின் 36வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற 162 ரன்கள் எடுக்க வேண்டும்.
கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் அவுட்டாக, பொறுப்புடன் விளையாடிய விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் 47 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, மும்பை அணியின் ஸ்கோர் அதிகரிப்பது தடைபட்டு போனது.
சூர்யாகுமார் யாதவ் நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ரன்கள் அடித்திருந்த நிலையில், பின்னி பந்துவீச்சில் குல்கர்ணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
போலார்ட் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்து விட்டு பத்து ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்ட்யா 23 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார்.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் கோபால் ரோகித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பின்னி, உனாத்கட் மற்றும் ஆர்சர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.