அந்த ரகசியத்தை சொன்னால் என்னை ஏலம் எடுக்க மாட்டார்கள் – தோனி கூல் பதில்!

If i tell the secret nobody can auction me - dhonis smart reply

by Mari S, Apr 24, 2019, 13:46 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற 41வது லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் நேற்றைய போட்டியில் கேப்டன் தோனி கடைசி வரை களமிறங்க வேண்டிய தேவையே இல்லாமல் சென்னை அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் செய்தியாளர்கள், தொடர்ந்து வெற்றி பெறும் ரகசியத்தைக் கூற முடியுமா? என கேள்வி கேட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த கேப்டன் தோனி, அந்த ரகசியத்தை சொன்னால் தன்னை யாரும் அடுத்த ஐபிஎல் சீசனில் ஏலம் எடுக்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும், தான் ரிட்டயர் ஆகும் போது கண்டிப்பாக அந்த ரகசியத்தைக் கூறுவதாகவும், இது வர்த்தக ரகசியம் என்றும் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

 

ஷேன் வாட்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, என்மேல் நம்பிக்கை வைத்த தோனிக்கு தான் செலுத்திய நன்றிக் கடனே நேற்றைய அதிரடி ஆட்டம் என பெருந்தன்மையுடன் கூறினார்.

உயர்இரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரைநோய் வருமா?

You'r reading அந்த ரகசியத்தை சொன்னால் என்னை ஏலம் எடுக்க மாட்டார்கள் – தோனி கூல் பதில்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை