பந்தை மறந்த அம்பயர்.... கலாய்த்த வர்ணணையாளர்கள்.... பெங்களூரு போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

Umpire forget ball during rcb vs kxip match

by Sasitharan, Apr 25, 2019, 06:55 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கி அதிரடி காட்டினர் பெங்களூரு பேட்ஸ்மென்கள். சீரான இடைவெளியில் இவர்கள் ஆடி வந்தனர். போட்டியின் 14வது ஓவரை வீசிய முருகன் அஷ்வின், ஓவர் முடிந்ததும் பந்தை அம்பயர் ஆக்ஸன்ஃபோர்டிடம் கொடுத்துவிட்டுச்சென்றார். அவர், அதை மற்றொரு அம்பயரான சம்சுதினிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

பின்னர் 15வது ஓவரை அங்கித் ராஜ்புத் பந்துவீச வந்தார். அப்போது, பந்து எங்கே என அம்பயரிடம் கேட்க, அவர் பந்தை பாக்கெட்டில் வைத்ததை மறந்துவிட்டு, பந்தைக் காணவில்லை என்று வீரர்களுடன் சேர்ந்து தேடிக்கொண்டிருந்தார். இது அங்கிருந்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், மைதானத்துக்கு வெளியில் இருந்து மாற்றாக பந்துகள் எடுத்துவரப்பட்டது. அப்போதுதான், தனது பாக்கெட்டில் பந்து இருந்ததை சம்சுதின் உணர்ந்தார். இதையடுத்து, சிறிய தாமதத்துக்குப் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. அம்பயரின் மறதி அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. வர்ணனையாளர்கள் அம்பயர்களை கலாய்த்து கொண்டிருந்தனர்.

ஸ்ரேயாஸ், தவான் அதிரடி – பஞ்சாபை பந்தாடியது டெல்லி அணி!

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை