கனவாகவே முடிந்த மகுடம்..... சாய்னா, சிந்து ஏமாற்றம்....

Asian batminton championship

by Sasitharan, Apr 27, 2019, 08:20 AM IST

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

சீனாவின் வுஹானில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நடக்கிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பி.வி. சிந்து, சாய்னா நேவல் உட்பட் சுமார் 24 பேர் கலந்து கொண்டனர். முதல் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய சாய்னா, சிந்து காலிறுதிக்கு முன்னேறினர். நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பிவி சிந்து காய் யன்யன்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 19-21, 9-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தார்.

சாய்னா நேவால் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 13-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 23-21 எனக் கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 16-21 இழந்து வெளியேறினார். யமகுச்சிக்கு எதிராக 9 ஆட்டத்தில் 8 முறை சாய்னா தோல்வியடைந்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் 54 ஆண்டுகளாக மகுடம் சூடியதில்லை என்ற சோகம் இந்த ஆண்டுதீரும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் இந்த ஆண்டும் அது கனவாகவே முடிந்து போனது.

இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் கோபிசந்த், இந்த ஏமாற்றமான தொடருக்கு வீரர்களுக்கு போதிய நேரமின்மை தான் காரணம் என பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார். தவிர, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளாக கருதப்படுவதால், புள்ளிகளை தக்கவைப்பது வீரர்களுக்கு மிகவும் அவசியம் என்றார்.

நடுவர்களை ஆபாசமாக திட்டியதால் நெய்மருக்கு வந்த வினை; 3 போட்டிகளில் விளையாட அதிரடி தடை

You'r reading கனவாகவே முடிந்த மகுடம்..... சாய்னா, சிந்து ஏமாற்றம்.... Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை