ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் அதே இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது ராஜஸ்தானிடம் தோற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகும் 4வது இடத்தை விட்டு கீழே இறங்குமா? என்ற போட்டி நிலவுவதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.
உலக கோப்பையை முன்னிட்டு இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ நாடு திரும்பியுள்ள நிலையில், அணிக்கு திரும்பியுள்ள கேன் வில்லியம்சன் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் அதிரடியால் நல்ல ஸ்கோரை ஐதராபாத் அணி உயர்த்தும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு டஃப் கொடுக்க வாய்ப்புள்ளது.
அதே வேளையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 150 ரன்களுக்குள் ஐதராபாத் அணியை சுருட்டி தனது அடுத்த வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற கடுமையான யுத்தம் செய்யும். மேலும், ராஜஸ்தானில் இந்த போட்டி நடைபெறுவதால், சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமும் கிடைத்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதால், ஐதராபாத் அணி தனது அதிரடி ஆட்டத்தை ஆடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.