பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணி ஐதராபாத்தை வெல்லுமா?

by Mari S, Apr 29, 2019, 19:42 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் ஐபிஎல் லீக் போட்டி இன்று ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பஞ்சாப் அணி மற்றும் ஐதராபாத் அணிகள் பலபரிட்சை நடத்தவுள்ளன. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், கேன் வில்லியன்ஸின் அணி முதலில் களமிறங்குகிறது.

இதுவரை இரு அணிகளும் 11 போட்டிகள் விளையாடி உள்ளன. இரு அணிகளும் 5 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் உள்ளன. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்த போட்டியில் வென்று அதே இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது பஞ்சாப் அணி வென்று 4வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முயலுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா?


Leave a reply