அடுத்த விராட் கோலி அஸ்வினின் திறமை - கிறிஸ் கெய்ல் ஓப்பன் டாக்

`கிரிக்கெட் உலகின் அரக்கன்', சிக்ஸ் மெஸின்' என அறியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் சில காலமாக பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். இதனால் வரும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனால் இப்போது நல்ல பார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இப்போது ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கி வருகிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் தன்னுடன் ஓப்பனிங் இறங்கும் இந்திய வீரர் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

அதில், ``லோகேஷ் ராகுல் அபரீதமான திறமையுடைய பேட்ஸ்மேன். என் மனதில் எழுந்த சிறந்த வீரராக அவர் இருக்கிறார். விராட் கோலிக்கு பிறகு இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவை செய்பவராக ராகுல் உள்ளார். இதற்காக ராகுல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. கோலி இடத்துக்கு மிகச்சரியானவர் என்றால் கே.எல்.ராகுல் தான். இருந்தாலும் இதுகுறித்து அவர் சிந்திக்காமல் இருக்க வேண்டும். தான் இதில் ஸ்ட்ராங் என்பதை அறிந்து அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அஸ்வினை பொறுத்தவரை இந்திய அணியின் மிக முக்கியமான பௌலராக இருந்தவர். அவர் ஒரு உணர்ச்சிகரமான பௌலர். பஞ்சாப் அணியுடன் இரண்டு ஆண்டுகள் விளையாடிவிட்டேன். கேப்டனாக அஸ்வின் மிகுந்த பற்றுதலோடு இருக்கிறார். தன் மீது மட்டுமில்லாமல், அணி மீதும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். ஒரு கேப்டனிடம் இப்படி குணங்கள் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Advertisement
More Sports News
sourav-ganguly-former-india-captain-takes-over-as-bcci-president
கிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..
india-won-south-africa-in-3rd-cricket-test-in-ranchi
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
Tag Clouds