உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவிடம் மீண்டும் சரண்டரான பாகிஸ்தான்

India beat Pakistan by 89 runs in the CWC match

by Nagaraj, Jun 17, 2019, 09:07 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் எங்களை வெல்லவே முடியாது என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிய போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கமே அமர்க்களமாக அமைந்தது. ஷிகர் தவானுக்குப் பதிலாக ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய லோகேஷ் ராகுல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நிதானமாகவும், அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் ரன்களையும் விளாசிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில் 57 ஏன் கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் அவுட்டானார். பின்னர் ரோகித் ஒன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோஹ்லி.இந்த ஜோடி பாகிஸ்தானின் பந்து வீச்சை கதற விட ரன் வேகம் மளமளவென உயர்ந்தது. 85 பந்துகளில் சதம் விளாசிய ரோகித் 113 பந்துகளில் 140 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார். அடுத்து ஹர்த்திக் பாண்ட்யா 19 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி ஒரு ரன் மட்டும் எடுத்து ஏமாற்றினார். கோஹ்லி 77 ரன்கள் எடுத்து வெளியேற 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையும் படைத்தது.

வெற்றிக்கு 337 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, மழை குறுக்கிடப் போகிறது என்ற பீதியும் ஒரு பக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அணியின் இமாமும், ஜமானும் களமிறங்க, வேகத்தில் புவனேஷ்வரும்,பும் ராவும் மிரட்ட, ரன் எடுக்க இருவரும் திணறினர்.தனது 3 ஓவரின் நான்காவது பந்தை வீசிய போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு புவனேஷ்வர், தொடர்ந்து பந்து வீச முடியாமல் போக, எஞ்சிய இரு பந்துகளை வீச வந்த தமிழக வீரர் விஜய்சங்கர் தனது முதல் பந்திலேயே இமாமை எல்.பி.டபிள்யு ஆக்கி வெளியேற்றினார். அதன் பின் ஜமானுடன் ஜோடி சேர்ந்தார் ஆஸம்.

இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்த போது, குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடர்ந்து வந்த ஹபீஸ் ,மாலிக் ஆகியோரை வேகத்தில் பாண்ட்யா பதம் பார்க்க பாகிஸ்தான் 12 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அடுத்து பாக்.கேப்டன் சர்பராஸ் அகமது 12 ரன்களில் விஜய் சங்கரிடம் போல்டாக பாகிஸ்தான் மேலும் தடுமாறியது.

இந்நிலையில் தான் மழையின் குறுக்கீடும் பாகிஸ்தானுக்கு எமனாக வந்தது. 36 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்து ஆட்டம் தடைபட்டது.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது எஞ்சிய 4 ஓவர்களில் பாகிஸ்தான் 136 ரன்கள் எடுக்க வேண்டும். இது சாத்தியமில்லாதது என்பதில் இந்தியாவின் வெற்றி அப்போதே உறுதியாகி இந்திய ரசிகர்கள் உற்சாக துள்ளல் போட்டனர். கடைசியில் 40 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது பாகிஸ்தான். 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.140 ரன்கள் குவித்து இந்தியாவின் அபார வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டகனானார்.

இந்த வெற்றி மூலம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிற வரலாறை மீண்டும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய சாதனை படைத்துள்ளது இந்தியா

விட்டு..விட்டு..மிரட்டுது மழை... இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி என்னவாகும்?

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவிடம் மீண்டும் சரண்டரான பாகிஸ்தான் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை