குடும்பம் மட்டும் அல்ல.. தோனியால் வந்த சண்டையும் காரணம்?! ரெய்னா இந்தியா திரும்பிய பின்னணி

Background on Raina India return

by Sasitharan, Aug 31, 2020, 10:18 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ்சின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகினார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் கூறப்பட்டது.அப்படி என்ன தனிப்பட்ட காரணம் என விசாரிக்கையில், ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால் அது மட்டும் ரெய்னாவின் இந்தியா திரும்பும் முடிவுக்குக் காரணமில்லை மற்ற காரணங்களும் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குக் காரணமான சென்னை பயிற்சி?!ஐபிஎல் தொடருக்காக அமீரகம் செல்வதற்கு முன்பே சென்னை சிதம்பரம் மைதானத்தில் அணி வீரர்கள் பயிற்சி நடத்தினர். ``தோனியின் ஆலோசனைப்படி இந்தப் பயிற்சியே தொடங்கியுள்ளது. 5 மாதங்களாக வீரர்கள் யாரும் பயிற்சி எடுக்காமல் இருந்ததால், அவர்களைப் பிட்டாக வைத்திருக்கும் பொருட்டு தோனி கொடுத்த யோசனைப்படி வீரர்களைச் சென்னை வரவழைத்து பயிற்சிகளை நடத்தியுள்ளது சென்னை அணி நிர்வாகம்.

ஆனால் இந்தப் பயிற்சியை நடத்த, முதலில் சென்னை அணி நிர்வாகம் தயக்கம் காட்டியுள்ளது. அதற்குக் காரணம், சென்னையில் கொரோனாவின் தீவிரம் அதிகம் இருந்ததே. ஆனால் `சென்னையில் பயிற்சி மேற்கொள்வது அவசியம்' என்று கூறி வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று கூறியது தோனிதானாம். தோனி சொன்னதை அடுத்தே தனி விமானம் மூலம் வீரர்கள் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். சென்னை வந்த அவர்கள், வழக்கம் போல க்ரவுன் பிளாஸா ஹோட்டலில் தங்கி, பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே தான், சென்னை அணி நிர்வாகம் எதிர்பார்த்த அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துபாய் சென்றதும் 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர் உட்பட 10-க்கும் அதிகமானப் பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இது சுரேஷ் ரெய்னா,மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதன்பிறகே துபாயில் வீரர்களுக்கு கொரோனா வந்ததுக்குக் காரணம், சென்னை பயிற்சி முகாம் தான் காரணம் என்று கூறி ரெய்னா அணி நிர்வாகத்துடன் சண்டையிட்டுள்ளார்.

தோனி ஆலோசனைப்படியே பயிற்சி முகாம் நடந்தது என அணி நிர்வாகம் விளக்கம் சொல்ல, ஒரு கட்டத்தில் தோனியின் முடிவுகள் குறித்து வாக்குவாதம் செய்துள்ளார் ரெய்னா. வாக்குவாதத்தில் கோபத்தில் சில வார்த்தைகளையும் கொட்டியிருக்கிறார் என்கிறார்கள். இந்த வாக்குவாதம் அதிருப்தியை ஏற்படுத்தவே, இந்தியா திரும்ப விரும்புவதாகச் சென்னை அணி நிர்வாகத்திடம் சொல்லியுள்ளார். அவர்களும் ரெய்னாவின் முடிவுக்குச் செவிசாய்க்க தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இந்த விவகாரங்கள் சென்னை அணியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை