மிகச் சிறந்த அணி இல்லை ஆனால் இந்த முறை வேற லெவல்... ஏ.பி.டியின் சூப்பர் பேட்டி

by Sasitharan, Sep 14, 2020, 13:57 PM IST

கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை. இத்தனைக்கும் பெங்களூர் அணியில் சிறப்பான சர்வதேச வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால் இந்த முறை அந்த கவலை வேண்டாம் என்கிறார் அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். ஆர்.சி.பி போல்ட் டைரீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், " ஒவ்வொரு வருடமும் போட்டி ஆரம்பிக்கும் முன்பு இந்த ஆண்டு அணி சிறப்பாக இருக்கிறது எனக் கூறி இருக்கிறோம். ஆனால் சத்தியமாக சொல்கிறேன், இந்தாண்டு அணி வேறு மாதிரி இருக்கிறது. அதற்காக மிகச்சிறந்த அணி என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் அணியில் தற்போது ஒரு புத்துணர்ச்சி நிலவுகிறது. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை மட்டும் தான் இப்போது என்னால் சொல்ல முடியும். அணியின் வீரர்கள் காம்பினேஷன் சிறப்பாக இருக்கிறது. இதனால் 11 வீரர்களை ஈஸியாக தேர்வு செய்ய முடியும். ஒருவேளை அவர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால், அவர்கள் இடத்தில் வேறு சிறந்த வீரர்களை களமிறக்க முடியும்" என்று கூறி உள்ளார்.

READ MORE ABOUT :

More Ipl league News