2 ஆண்டுக்கு பிறகு களமிறங்கும் சிங்கங்கள் - வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே.?

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் காணுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கினாலும், ரசிகர்களிடம் முன்பு இருந்ததை விட அதிக வரவேற்பு தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

ஆனால், ஆதர்சன சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு களமிறங்குகிறது சென்னை அணி. அதே சமயம் நடப்புச் சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே உத்வேகத்தோடு களம் காண உள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 132 போட்டிகளில் 79 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 52 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேத்யூ ஹைடன் மற்றும் 2013ஆம் ஆண்டு மைக் ஹஸி ஆகியோர் பெற்றுள்ளனர்.

அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கைப்பற்றியுள்ளது. 2013ஆம் ஆண்டு டுவைன் பிராவோ, 2014 ஆம் ஆண்டு மொஹித் சர்மா, 2015ஆம் ஆண்டு டுவைன் பிராவோ ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில், 321 பவுண்டரியுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்திலும், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில், 150 சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்திலும் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பெற்ற இடங்கள்:

2008 ஆம் ஆண்டு – 3ஆம் இடம்
2009 ஆம் ஆண்டு – இரண்டாவது இடம்
2010 ஆம் ஆண்டு – சாம்பியன்
2011 ஆம் ஆண்டு – சாம்பியன்
2012 ஆம் ஆண்டு – நான்காவது இடம்
2013 ஆம் ஆண்டு – முதல் இடம்
2014 ஆம் ஆண்டு – மூன்றாவது இடம்
2015 ஆம் ஆண்டு – முதல் இடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:

1. சுரேஷ் ரெய்னா, 3699 ரன்கள்
2. எம்.எஸ்.தோனி, 2987 ரன்கள்
3. மைக் ஹஸி, 1768 ரன்கள்
4. முரளி விஜய், 1600 ரன்கள்
5. எஸ்.பத்ரிநாத், 1441 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள்:

1. ரவிச்சந்திரன் அஸ்வின், 90 விக்கெட்டுகள்
2. டுவைன் பிரவோ, 79 விக்கெட்டுகள்
3. ஆல்பி மோர்கல், 76 விக்கெட்டுகள்
4. மொஹித் சர்மா, 57 விக்கெட்டுகள்
5. ரவீந்திர ஜடேஜா, 55 விக்கெட்டுகள்

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds