இந்திய கிரிக்கெட்டில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
பெங்களூருவில் நேற்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்துக் கொண்டனர். இவர்களை தவிர, உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில், 2016-2017, 2017-2018ம் ஆகிய இரண்டு சீசன்களில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் சிறப்பாக விளையாடி பல தொடர்களை வென்றும், உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
இந்த இரண்டு சீசன்களிலும் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. இதேபோல், பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீரர்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெற்றனர்.
தொடர்ந்து, அதிக ரன் எடுத்த வீரர், விக்கெட் எடுத்த வீரர், விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஆண் மற்றும் பெண் வீரருக்கான ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.