கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சச்சின் வாழ்த்து!

sachin in santaClaus dress

Dec 25, 2018, 20:28 PM IST

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ்துமஸ் தின வாழ்த்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளர். மேலும், ஆஷ்ரே எனும் குழந்தைகள் நல வாழ்வு மையத்திற்கு சென்று அந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்து அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

இந்த வீடியோவை சச்சின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

You'r reading கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சச்சின் வாழ்த்து! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை