ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று சாதனையை இந்தியா படைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இது வரை நடந்த 3 டெஸ்ட்டில் அடிலெய்டு, மெல்போர்னில் இந்தியாவும், பெர்த் டெஸ்டில் ஆஸி.யும் வென்றன.
இதில் இந்தியா 2-1 என்ற முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் துவங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். மெல்போர்ன் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி அரைசதம் அடித்தார். துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இன்றும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 77 ரன்களில் அவுட்டானர்.
தொடர்ந்து இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. சிட்னி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற சாதனையை இந்தியா படைக்கும்.