கட்சிக்குள் உரசலால் வருமான வரி சோதனையில் சிக்கினாரா துரைமுருகன்.? என்ன ஆச்சி துரைமுருகனுக்கு வேலூர் உ.பி.ஸ்க்க்கள் கவலை

Do duraimurugan caught in IT raid over DMK party inside clash

Apr 1, 2019, 17:05 PM IST

திமுகவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சனிகிழமை அதிகாலையில் காட்படியில் உள்ள துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தி வரும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் வருமான வரிதுறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டர்.

அப்போது துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் வசித்துவரும் காட்பாடி இல்லத்தில் இருந்து 19 லட்ச ரூபாய் பணத்தை கண்டறிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த படிவத்தில் கதிர் ஆனந்த் தனது வீட்டில் கையிருப்பாக 9 லட்சம் ரூபாய் பணமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய்ப்பட்ட இரண்டாவது நாள் அதிகாலை சோதனையின் போது 19 லட்ச ரூபாய் இருந்ததால் அதில் 10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது.


பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தனது அறையை அதிகாரிகள் சோதனையிட வந்திருப்பதாக கூறினார்கள், சரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கூறிவிட்டு தான் குளிக்க சென்றுவிட்டதாக தனக்கே உரிய நக்கலான பதிலை தெரிவித்திருந்தார்.


அதைதொடர்ந்தே டிஜிபியின் உத்தரவின் பெயரிலேயே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டதாக தகவல் வெளியானது. இந்த சோதனையில் பெரிய அளவில் பணம் சிக்காததால் துரைமுருகனின் விசுவாசிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் வருமான வரிதுறை புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனையை துரைமுருகனை சுற்றியுள்ள நண்பர்கள், உதவியாளர்கள் கல்லூரி என அடுத்த அடுத்த இடங்களை நோக்கி நகர்ந்தது. இதில் , தற்போது வரை துரைமுருகனின் வீடு கல்லூரி, உதவியாளர் மற்றும் நண்பர்கள் என 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


வருமான வரி துறைக்கு கிடைக்கபெற்ற தகவல் மூலம், கடந்த முறை சோதனைக்கு பிறகு நள்ளிரவில் கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கட்டுக்கட்டான பணம் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதில் காட்பாடி அருகே உள்ள பல்லிகுப்பத்தில் சிமெண்ட் குடோனில் கட்டுகட்டான பணம் இருப்பதை கண்டறிந்து தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் கிங்ஸ்டன் கல்லூரிக்கு அருகே உள்ள கல்புதூரில் துரைமுருகனின் உதவியாளரான அஸ்கர் அலி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்து கோடி வரையிலான பணம் கைப்பற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கோடி கணக்கான பணமும் எந்தெந்த தொகுதிக்கு எந்த ஊருக்கு வார்டு முதல் தெரு வரை குறிப்பிடப்பட்டு பேப்பர் கவர்களில் புத்தம் புதிய நோட்டுக்களாக பேக் செய்யபட்டுள்ளது. பணம் பறிமுதல் குறித்த செல்போன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவபட்டுவருகிறது. இந்த சோதனைக்கு பிறகு வருமான வரி சோதனைக்கு தடை கோரி அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் சார்பில் கோரிக்கை மனு வைக்கபட்டது. அதில் இது போன்ற சோதனையால் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியினர் ஈடுபடுடவது தடைபடும் விதத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை நாளை விசாரிக்கபடும் என நீதிமன்றம் கூறிவிட்டது.


நேற்றைய தினம் திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை துவங்கி திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இன்று சோளிங்கரில் பிரச்சார பொதுக்கூட்டம், துவங்குவதற்கு முன்பாகவே துரைமுருகனின் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கோடி கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிதுறைக்கு இத்தனை விவரங்களை துல்லியமாக கிடைக்கபெற்றது எப்படி என வேலூர் திமுக உ.பி.ஸ்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் திமுகவினரே என கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். திமுக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து வேலூர் நாடாளமன்ற தொகுதி வேட்பாளராக தன் மகனை நிறுத்தியதே இதற்கு காரணாம் என கூறப்படுகிறது. சில கட்சி நிர்வாகிகளிடம் பேசிய போது, ஆமாம் சார், அதுதான் உண்மையும் கூட, வேலூருக்கு திமுக என்றால் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு மட்டுமே சொந்தாமா என்ன?


தன் மகனை நிறுத்த துரைமுருகன் திட்டமிட்டபோதே மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் கோவத்தை ஏற்படுத்தியது. அப்போது சில எம்.எல்.எக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதில் கோபத்தின் உச்சிகே சென்ற துரைமுருகன் அனைவரிடமும் கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. கட்சியில் முக்கிய பொறுப்பு, மாவட்டத்தின் மூத்தவர் என்னும் அடிப்படையில் அப்போது அமைதியாக இருந்த அவர்கள் தற்போது அவருக்கு எதிரான செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வாக்காளர்களுக்கு கொண்டு செல்லபட்ட பணம் குறித்த தகவலை வருமான வரிதுறைக்கு தகவல் கொடுக்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கதிர் ஆனந்தின் வெற்றி கேள்விகுறியாகி உள்ளதால் வேலூர் உ.பி.ஸ்கள் கவலை அடைந்துள்ளனர்.

You'r reading கட்சிக்குள் உரசலால் வருமான வரி சோதனையில் சிக்கினாரா துரைமுருகன்.? என்ன ஆச்சி துரைமுருகனுக்கு வேலூர் உ.பி.ஸ்க்க்கள் கவலை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை