ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்

Admk dmk winning panchayat unions

by எஸ். எம். கணபதி, Jan 4, 2020, 11:34 AM IST

ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை திமுக கைப்பற்்றியுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி, ஒன்றியத் தலைவர் பதவியை அடுத்து நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில் கைப்பற்றும்.

இந்த வகையில், கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 9 ஒன்றியங்களை கைப்பற்றியிருக்கிறது. அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் திமுக அதிக இடங்களை பிடித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 ஒன்றியங்களில் அதிமுக, திமுக தலா 6 ஒன்றியங்களை கைப்பற்றி இருக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 8 ஒன்றியங்களிலும், திமுக 5 ஒன்றியங்களிலும் வென்றுள்ளன.


நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 ஒன்றியங்களில் அதிமுக 10 ஒன்றியங்களையும், திமுக 3 ஒன்றியங்களையும் பிடித்துள்ளன. சேலம் மாவட்டத்தில் அதிமுக 16 ஒன்றியங்களை கைப்பற்றியது. அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்தில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.


கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. நீலகிரியில் மொத்தம் உள்ள 4 ஒன்றியங்களிலும் திமுக வென்றிருக்கிறது. மதுரையில் உள்ள 13 ஒன்றியங்களில் அதிமுக 6 ஒன்றியங்களிலும், திமுக - 6 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஒன்றியங்களில் அதிமுக 4 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


விருதுநகரில் மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் திமுக 8 ஒன்றியங்களையும், அதிமுக 2 ஒன்றியங்களையும் பிடித்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 4 ஒன்றியங்களிலும் திமுக 10 ஒன்றியங்களிலும் வென்றுள்ளன.தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில் அதிமுக 5 ஒன்றியங்களை கைப்பற்றியது. திமுக ஒரு ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ளது.


கிருஷ்ணகிரியில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில் திமுகவிற்கு 7 இடத்திலும் அதிமுகவுக்கு 3 இடத்திலும் வெற்றி கிடைத்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்கள் திமுக 12 ஒன்றியங்களை கைப்பற்றி இருக்கிறது. 2 ஒன்றியங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

திருவாரூரில் உள்ள 10 ஒன்றியங்களில் அதிமுக 4 ஒன்றியங்களையும், திமுக 5 ஒன்றியங்களையும் கைப்பற்றின. நாகையில் மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் திமுக 9, அதிமுக 2 கைப்பற்றியுள்ளன. திருவண்ணாமலையில் மொத்தம் உள்ள 18 ஒன்றியங்களில் அதிமுக - 8 இடங்களிலும், திமுக - 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக - 5 ஒன்றியங்களிலும், திமுக - 7 ஒன்றியங்களிலும் வென்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களில் திமுக 3 ஒன்றியங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 12 ஒன்றியங்களிலும், திமுக - 2 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றி இருக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் அதிமுக - 4 ஒன்றியங்களிலும் திமுக - 2 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 ஒன்றியங்களில் திமுக 11 இடங்களிலும் அதிமுக - 2 இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.


சிவகங்கையில் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக - 5 ஒன்றியங்களையும், திமுக - 4 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக - 6 இடத்திலும், திமுக - 5 இடத்திலும் வென்றுள்ளன. கன்னியாகுமரியில் மொத்தம் உள்ள 9 ஒன்றியங்களில் அதிமுக - 2 ஒன்றியங்களையும், திமுக - 4 ஒன்றியங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.ராமநாதபுரத்தில் இருக்கும் 11 ஒன்றியங்களில் அதிமுக - 3 ஒன்றியங்களிலும்,திமுக - 7 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

You'r reading ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை