கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் தொடரும் கொரோனா...

Advertisement

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. எனினும், சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.17) 5560 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 25,420 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5524 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 70,192 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 59 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8618 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 992 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 206 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 52,567 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கும், கடலூரில் 206 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 239 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 31,712 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29,446 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், திருப்பூரில் 191 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 82,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 60 லட்சத்து 23 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>