சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு

சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மருந்துகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை சுத்தமாக அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம்செய்தல் ஆகியவற்றின் மூலமே கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வணிக வளாக பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு வரும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மட்டும் மாநகராட்சியின் சார்பில் சுமார் 1.5 லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்காடி பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வணிக வளாக பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், 22 தற்காலிக பூத் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் முகக் கவசம் அணியாத தனி நபர்களிடமிருந்து இதுநாள் வரை ரூபாய் 3.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் நேரடியாக சென்று பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வணிக வளாக பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

பொதுமக்கள் வணிக வளாகங்களிலும் இதர அங்காடி பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்”.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds