கல்யாணம் முடித்த கையோடு காதல் ஜோடிகள் மர்மமான முறையில் தற்கொலை..

by Logeswari, Nov 16, 2020, 21:35 PM IST

சின்ன சேலம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள நாமநாயக்கன்பாளையத்தை சார்ந்தவர் பாஸ்கர். இவர் செம்பா குறிச்சியை சேர்ந்த கவிதாவை காதலித்து வருகின்றார். கவிதா காட்டு கொட்டாயில் உள்ள கல்லூரியில் பயிலும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுயுள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்ததால் இரு வீட்டார்களும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் இருவரும் நேற்று ஈறியுரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் கோயிலுக்கு வெளியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர்களின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை