மௌன `ரஜினி.. அர்ஜூன மூர்த்தியின் `அரசியல்... லதா முடிவுதான் என்ன?

Advertisement

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் வதாக அறிவித்திருந்த சமயத்தில், பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, அக்கட்சியிலிருந்து விலகி ரஜினியுடன் கைகோத்தார். ரஜினியின் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அர்ஜுனமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், தன் உடல்நிலையைக் காரணம்காட்டி ரஜினி அரசியலுக்கு குட்பை சொன்னதும் வருத்தமடைந்த அர்ஜுனமூர்த்தி சில நாட்கள் அமைதியாக இருந்தார். ரஜினி அன்பு மட்டும்போதும் வெறு எதுவும் வேண்டாம் எப்போதும் ரஜினிதான் எனது சூப்பர் ஸ்டார் என்று அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே, திடீரென நேற்று ஜனவரி 28-ம் தேதி புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக அர்ஜுனமூர்த்தி அறிவித்தார். எனது கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பா.ஜ.க-விலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்றும் அர்ஜுனமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

அண்மையில், பெங்களூருக்குச் சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். 12 நாள்கள் அங்கு தனது நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு சில நாள்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். பெங்களூருக்குக் கிளம்புவதற்கு முன்பாக, ரஜினியைச் சந்திக்க அர்ஜூனமூர்த்தி நேரம் கேட்டார். ஆனால், ரஜினி நேரம் தரவில்லை. ரஜினி சென்னை திரும்பிய பிறகே அர்ஜுனமூர்த்திக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பு நடைபெற்றது.அப்போது, தனது புதிய கட்சி தொடர்பாக ரஜினியிடம் அர்ஜுனமூர்த்தி பேசியிருக்கிறார். ஆனால், கட்சி குறித்து ரஜினி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே, அண்ணாத்த பட ஷூட்டிங் பணிகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளன. அடுத்த ஓரிரு மாதங்களில், மீதமிருக்கும் ஷூட்டிங் பணிகளையும் முடித்துவிட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக நடிகர் ரஜினி ஏப்ரலில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, புதிய கட்சி தொடங்கியிருக்கும் அர்ஜூனமூர்த்தியின் பின்னணியில் லதா ரஜினிகாந்த் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜினிக்குத் தெரியாமல் அவர் குடும்பத்தில் எதுவும் அசையாது. ஆனாலும், மனைவி லதாவே களத்தில் இறங்கியிருப்பதால்,ரஜினி என்ன செய்வது தெரியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலில் குதிக்க ரஜினிக்கு மனமில்லை. தன் முடிவுக்கு ஆதரவாகக் குடும்பத்தினரும் இருப்பார்கள் என்று நினைத்தார். அதற்கு மாறாக, குடும்பத்தினர் முடிவெடித்துவிட்டதால், அவரால் என்ன செய்ய முடியும் என்றும் முடிவெடுக்க முடியாத நிலையில் ரஜினி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>