காலா படம் ரஜினியின் அரசியல் பயணத்திற்கான எடுக்கப்பட்டதல்ல என இயக்குநர் பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் படம் பார்த்த பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், காலா குறித்து கருத்து தெரிவித்தார். "நான் இயக்குநர் அல்ல நான் அரசியல்வாதி, காலா படம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல, மக்கள் பிரச்சினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சமூக நீதிப் படம்" என்றார் பா.ரஞ்சித்
"காலா படத்தில் வசனங்கள் திணிக்கப்படவில்லை, கதைக்காக மட்டுமே வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்த படம் ரஜினியை அரசியல் ரீதியாக அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வது குறித்து ரசிகர்கள் முடிவு செய்வார்கள், நான் இயக்குநர் அல்ல நான் அரசியல்வாதி, தொடர்ந்து சமூதாய ஏற்ற தாழ்வுகள் குறித்து படம் எடுப்பேன்"
"பல விமர்சனங்களின் தொடக்கம் தான் காலா படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, காலா படத்திற்கு சாதகமான கருத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன" என்றார்.