முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், 6 பட்டுப்புடவை, திருடப்பட்டதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வீட்டின் மேலாளர் முரளி என்பவர் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலிசார் விசாரணையயை தொடங்கினர், வீட்டின் பூட்டு எதுவும் உடைக்கப்படாத நிலையில், வீட்டில் வேலை செய்து வரும் ஆட்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பணிப்பெண்கள் வெண்ணிலா , விஜி ஆகிய இருவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தனர்.
மேலும், வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் பணிப்பெண்கள் இருவரும் எல்லா அறைகளுக்கும் செல்வது தெளிவாகியுள்ளது. இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட நகைகள், பணம், மற்றும் பட்டுப்புடவைகள் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
பணிப்பெண்கள் இருவரையும் கைது செய்த ஆயிரம் விளக்கு போலீசார் அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம், மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். கைதான பணிப்பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.