திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளான இன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 27ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு, ஐசியு பிரிவில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சையும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பும் இருந்து வருகிறது.
‘தலைவா எழுந்து வா’ என்ற கோஷத்துடன் கடந்த ஐந்து நாட்களாக திமுக தொண்டர்கள் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் காவேரி மருத்துவமனையின் வாயிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் வந்தனர்.
முக்கிய தலைவர் கருணாநிதியை பார்தத புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. இதை பார்த்த பிறகு தான் தொண்டர்கள் பெருமூச்சி விட்டனர்.
கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. மேலும், கருணாநிதியை நேரில் பார்த்துவிட்டு வரும் அரசியல் தலைவர்களும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதன் எதிரொலியாக அவரை படுக்கையிலேயே சிறிது நேரம் அமர வைத்துள்ளனர். பின்னர், நாற்காலியில் அமரவைத்த மருத்துவர்கள் சிறிது நேரம் பயிற்சி அளித்தனர்.
இதற்காக, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் ஏற்பாட்டில் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொற்று நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் அனைத்தும் திரும்திகரமாக இருப்பதாகவும் லண்டன் மருத்துவர் தெரிவித்தார். இதனால், தொண்டர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.