நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

பொதுமக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.

MK Stalin inquired

அங்கு, கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழ்ந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அவருடன் நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யா மொழி, சேகர் பாபு முதலானோர் உடனிருந்தனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News