பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் நிர்ணயித்து வெளியிடப்படுகிறது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இன்றையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.82.24, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.75.19 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத இந்த விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை குறைக்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.