கல்லூரி முதல்வர் உட்பட இரண்டு மாணவிகள் மீது பாலியல் வழக்கு

Harassment case Filed at Thiruvannamalai

by Manjula, Oct 13, 2018, 09:59 AM IST

உயர் கல்வி துறையில் பெருகி வரும் பாலியல் குற்றசாட்டுகள் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய தொடர்ந்து தமிழ் நாட்டில் மேலும் ஒரு குற்றசாட்டு திருவண்ணாமலை வேளாண் கல்லூர் முதல்வர், பேராசிரியர்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ளது.

Agricultural College-TV Malai

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் செயல்பட்டு வந்த வேளாண் கல்லூரியின் மாணவி அளித்த பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவிப்பேராசிரியர்கள் தங்கபாண்டியன், புனிதா, மைதிலி மற்றும் சில கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் பலாத்காரம், மானபங்கம், அவதூறாக பேசுதல், மன உளைச்சல் மற்றும் பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கை திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையம் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் மாவட்ட நீதிபதியிடம் மாணவி அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு ஆவணங்களாக தயாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்.

Agricultural College-TV Malai

மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர்கள் தங்கபாண்டியன், புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்தும், வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்தும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading கல்லூரி முதல்வர் உட்பட இரண்டு மாணவிகள் மீது பாலியல் வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை