தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் வாடகை தராமல் இருக்கும் வாடகைதாரர்களை 4 வாரத்திற்குள் காலி செய்ய தமிழ்நாடு வீடு வசதி வாரியத்திற்கு உத்தரவு போட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் திட்டத்தினை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் வாடகை தராமல் இருக்கும் வாடகைதாரர்களை 4 வாரத்திற்குள் காலி செய்ய தமிழ்நாடு வீடு வசதி வாரியத்திற்கு உத்தரவு போட்டுள்ளது உயர்நீதிமன்றம். விதிகளுக்கு புறம்பாக ஒதுக்கீடு பெற்றவர்களை 3 மாதத்திற்குள் காலி செய்யவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
மேலும், வாடகை செலுத்த தவறினால் அதிகாரிகளாக இருந்தாலும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தனியார் குடியிருப்பு பகுதிகளில் யாரும் வாடகை தராமல் குடியிருக்க முடியாது அதுபோல் தமிழ்நாடு அரசு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் அனைவரும் வாடகை தர வேண்டும் அப்போது தான் மக்களின் வரிப்பணம் வீணடிக்காமல் தடுக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை தராமல் இருப்பவர்களுக்கு எந்த ஒரு கரிசனமும் காட்டக்கூடாது, அப்படி கரிசனத்துடன் நடந்து கொள்ளும் அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் வாடகை தரர்களின் வீடுகளுக்கான வாடகை கணிசமாக உயர்த்தப்பட்டது. அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு அந்த அரசாணையை உறுதி செய்தது.