தினகரன் கோஷ்டியில் இருந்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் ஓகே செய்ததே சபரீசன் டீம் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் என்கின்ற அறிவாலய வட்டாரங்கள்.
தினகரன் அணியில் திடீரென மாயமானார் செந்தில் பாலாஜி. அவரை சமாதானப்படுத்த தினகரன் படுதீவிரமாக முயற்சித்தார். ஆனால் பலனளிக்கவில்லை.
இதனிடையே திமுகவில் 20 தொகுதி நிலவரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சபரீசன் தலைமையிலான டீம் அரவக்குறிச்சி கொடுத்த அறிக்கைதான் ஸ்டாலினை ரொம்பவே யோசிக்க வைத்ததாம்.
அந்த அறிக்கையில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி தனித்த செல்வாக்குடன் இருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் செந்தில் பாலாஜியால் அரசு உதவி பெற்றவர்கள் இருக்கின்றனர்.
இதனால் செந்தில் பாலாஜி சுயேட்சையாக நின்றால் கூட வெல்லவே வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு வலிமையானவராக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின்.
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை சேர்த்துக் கொண்டு அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்க ஓகே சொன்னாராம் ஸ்டாலின் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.