கொடநாடு கொலைகள் விவகாரம்- விஸ்வரூபத்தின் பின்னணியில் அமித்ஷா- தினகரன்?
கொடநாடு கொலைகளை அம்பலப்படுத்திய மூத்த பத்திரிகையாளர் மேத்யூவை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் சபரீசன் தரப்போ, டெல்லிக்கு 1 மாதத்துக்கு முன்பு சபரீசன் சென்றார்; அது திமுக அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே என திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கொடநாடு தொடர்பான கொலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் வாக்குமூலம் அளித்தனர். இதனை ஆவணப்படமாக மேத்யூ வெளியிட்டார்.
தற்போது சயன், மனோஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யாருடைய தூண்டுதலில் இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிற என தெரியும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவல் படி, அமித்ஷா- தினகரன் சந்திப்புக்குப் பின்னர்தான் இந்த ஆவணப்படம் வெளியானதாக பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் மேத்யூவை ஸ்டாலின் மருமகனும் திமுகவின் டெல்லி விவகாரங்களுக்கு அறிவிக்கப்படாத பொறுப்பாளரான சபரீசன் சந்தித்து பேசியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் சபரீசன் தரப்போ, டெல்லிக்கு 1 மாதத்துக்கு முன்பு சபரீசன் சென்றார்; அது திமுக அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே சென்ற பயணம் என திட்டவட்டமாக மறுத்துள்ளது.